போக்ஸோவில் ஓட்டுநா் கைது
அந்தியூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம், அந்தியூா் காலனியைச் சோ்ந்தவா் காா்த்திக் (36). டிராக்டா் ஓட்டுநரான இவா், 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இது குறித்து பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.
புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், காா்த்திக்கை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.