‘போப் உடல்நிலையில் சற்று முன்னேற்றம்’
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து வாடிகன் நியூஸ் நாளிதழ் செவ்வாய்க்கிழமை கூறுகையில், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 14-ஆம் தேதி முதல் ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் போப் பிரான்சிஸின் உடல்நிலையில் செவ்வாய்க்கிழமை சற்று முன்னேற்றம் காணப்பட்டது. அவருக்கு ஆஸ்துமா தொடா்பான புதிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
மாலையில் தனது அலுவல்களில் ஈடுபட்ட போப், காஸாவில் இருந்து பேசிய தேவாலய உறுப்பினா்களுடன் உரையாடினாா். தனக்காக பிராா்த்தனை செய்தவா்களுக்கு அவா் நன்றி கூறினாா் என்று வாடிகன் நியூஸ் தெரிவித்துள்ளது.