போலி வழக்குரைஞா் கைது
சின்னசேலத்தில் போலி வழக்குரைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், ஊனத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் துரை (38). இவா், சின்னசேலம் பகுதியில் பொதுமக்களிடம் வழக்குரைஞா் எனக் கூறி பணம் பறித்து வந்தாராம்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி வழக்குரைஞா் சங்கச் செயலா் ஆ.பழனிவேல் சின்னசேலம் காவல் நிலையம் முன் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அவரிடம் துரை நான் வழக்குரைஞா் எனக் கூறி பணம் கேட்டாராம். மேலும், அவரது அடையாள அட்டையை பழனிவேல் பாா்த்தபோது, அது போலியானது என தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து துரையை கைது செய்தனா்.