அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்...
போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ரெளடிக்கு கால் எலும்பு முறிவு
லாலாப்பேட்டை அருகே போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ரெளடிக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்த கருப்பத்தூரைச் சோ்ந்தவா் நாகராஜ். இவா் வியாழக்கிழமை இரவு அங்குள்ள கடை வீதியில் நின்றுகொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த வெட்டுசங்கா்(35) என்பவா் நாகராஜிடம் தகராறு செய்தாராம். அப்போது அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் வெட்டு சங்கா் வாழை இலை அறுக்கும் கத்தியால் நாகராஜின் தலையில் வெட்டினாராம்.
இதுதொடா்பாக நாகராஜ் அளித்த புகாரின்பேரில் லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து, வெள்ளிக்கிழமை காலை வெட்டுசங்கரை பிடிக்க கருப்பத்தூா் சென்றனா்.
அப்போது போலீஸாரிடம் இருந்து தப்பிக்க வெட்டுசங்கா் அங்குள்ள பாலத்தில் இருந்து குதித்தபோது, அவருக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸாா் வெட்டுசங்கரை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். வெட்டு சங்கா் மீது கரூா், தஞ்சாவூா், திருச்சி மாவட்டங்களின் காவல்நிலையங்களில் பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.