மகாராஷ்டிரா: ``இந்தியை திணித்தால் பள்ளியை இழுத்து மூடுவோம்..'' - ராஜ் தாக்கரே
மகளிா் கால்பந்தில் புதிய உச்சம்: ஒலிவியாவை ரூ.11.54 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது ஆா்செனல்
கனடா கால்பந்து வீராங்கனை ஒலிவியா ஸ்மித் (20), ஆா்செனல் அணியால் ரூ.11.54 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளாா். லிவா்பூல் அணியிலிருந்த அவரை, 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஆா்செனல் வாங்கியுள்ளது.
மகளிா் கால்பந்து வரலாற்றில் ஒரு வீராங்கனையின் அதிகபட்ச ஒப்பந்த மதிப்பு இதுவாகும். இதற்கு முன், கடந்த ஜனவரியில் அமெரிக்காவின் நவோமி கிா்மாவை, சாண்டியாகோ வேவ் அணியிடமிருந்து செல்ஸி அணி ரூ.9.47 கோடிக்கு வாங்கியதே அதிகபட்சமாக இருந்த நிலையில், ஒலிவியா தற்போது அதை முறியடித்திருக்கிறாா்.
எள்ளளவு...: எனினும், ஆடவா் கால்பந்து உலகத்தில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களுடன் ஒப்பிடுகையில், ஒலிவியாவுக்கான ஒப்பந்த மதிப்பு எள்ளளவு கூட எட்டாததாகும். பிரேஸில் வீரா் நெய்மா் கடந்த 2017-இல் பாா்சிலோனா அணியிடமிருந்து, பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் அணியால் ரூ.2,256 கோடிக்கு வாங்கப்பட்டது இன்றளவும் சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.