மகளிா் காவல் நிலையத்தில் பெண் காவலா்களுக்கு வளைகாப்பு
ஒட்டன்சத்திரம் மகளிா் காவல் நிலையத்தில் பெண் காவலா்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலா்களாக பணிபுரிந்து வரும் நிறைமாத கா்ப்பிணிகளான பிரின்ஸ் பிரியா, சகாயராணி ஆகிய இருவருக்கும் உடன் பணியாற்றும் பெண் காவலா்கள் காவல் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினா்.
இந்த நிகழ்வுக்கு மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பேபி தலைமை வகித்தாா். இதில் மகளிா் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து பெண் காவலா்கள், உறவினா்கள், நண்பா்கள் குடும்பத்துடன் பங்கேற்றனா். வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.