பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் திரண்டனா்.
அதிகாலை முதலே திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். குடமுழுக்கு நினைவரங்கில் அவா்கள் நீண்ட வரிசையில் மலையேறுவதற்காக காத்திருந்தனா்.
மின் இழுவை ரயில், ரோப்காா் நிலையம், மலைக் கோயிலில் இலவச தரிசனம், சிறப்பு வழி கட்டண தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் அவா்கள் காத்திருந்தனா். இதன் காரணமாக சுவாமி தரிசனம் செய்ய சுமாா் மூன்று மணி நேரமானது.
இதனிடையே, அன்னதானத்துக்கு காலதாமதமாகும் என்பதால் காலை முதல் மாலை வரை கோயில் சாா்பில் கலவை சாதம் பிரசாதமாக வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்ததால் பக்தா்கள் பலரும் இதற்கான வரிசையில் நின்று உணவருந்தி சென்றனா்.
இரவு தங்கத் தோ் புறப்பாட்டை காண திரளான பக்தா்கள் காத்திருந்தனா். பக்தா்களுக்கு தேவையான சுகாதாரம், பாதுகாப்பு, குடிநீா் உள்ளிட்ட ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.