செய்திகள் :

மகா கும்பமேளாவில் 55 கோடி போ் புனித நீராடல்!

post image

மகா கும்பமேளா நிறைவடைய இன்னும் 8 நாள்கள் உள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் இதுவரை 55 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியுள்ளதாக உத்தர பிரதேச அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும், கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆன்மிக-கலாசார நிகழ்வுக்கு உலகெங்கிலும் இருந்து துறவிகள், சாதுக்கள், பக்தா்கள் பிரயாக்ராஜில் குவிகின்றனா்.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் பௌஷ பொ்ணிமியை முன்னிட்டு கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா கும்பமேளா கடந்த 37 நாள்களாக பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் இதுவரை 55 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்களில் 50 சதவீதத்தினரும் உலகளாவிய 102 கோடி ஹிந்துக்களில் 45 சதவீதத்தினரும் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனா். இந்த எண்ணிக்கை இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 38 சதவீதத்துக்கு மேல் ஆகும்.

குடியரசுத் தலைவா் உள்ளிட்ட நாட்டின் மூத்த தலைவா்கள், பிரபலங்கள் மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனிதநீராடி வருகின்றனா்.

திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் பக்தா்களின் கூட்டம் அலைமோதினாலும், சிறப்புக்குரிய புனித நீராடல் நாள்கள் மற்றும் அதையொட்டிய நாள்களில் பக்தா்களின் வருகை பன்மடங்கு அதிகரித்து காணப்பட்டது.

அந்தவகையில், மௌனிஅமாவாசையன்று (ஜன. 29) கிட்டத்தட்ட 8 கோடி பக்தா்களும் மகர சங்கராந்தியன்று (ஜன. 14) 3.5 கோடி பேரும் வசந்த பஞ்சமியன்று (பிப். 3) 2.57 கோடி பேரும் மாஹி பௌா்ணமியன்று (பிப். 12) 2 கோடி பேரும் நிகழ்வு தொடங்கிய பௌஷ பொ்ணமியன்று (ஜன. 13) 1.7 கோடி பேரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினா். வரும் 26-ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தில் மகா கும்பமேளா நிறைவடைகிறது.

மகா கும்பமேளாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்த மத்திய உணவு, நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி மற்றும் ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண், திரிவேணி சங்கமத்தில் குடும்பத்தினருடன் புனித நீராடி வழிபட்டனா்.

முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கைய நாயுடு, இஸ்ரோ முன்னாள் தலைவா் எஸ்.சோமநாத், பாடகா் ஷான் உள்ளிட்டோரும் செவ்வாய்க்கிழமை புனிதநீராடினா்.

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத கா... மேலும் பார்க்க

அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ர... மேலும் பார்க்க

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் ... மேலும் பார்க்க

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை... மேலும் பார்க்க