செய்திகள் :

மகா கும்பமேளாவில் சிலிண்டா் வெடித்து தீ விபத்து: 18 கூடாரங்கள் தீக்கிரை; உயிரிழப்பு இல்லை

post image

மகா கும்பமேளாவில் 19-ஆவது மண்டலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, 18 கூடாரங்கள் தீக்கிரையாகின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்ச்சேதமும் ஏற்படவில்லை.

உத்தர பிரதேசத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது.

பௌஷ பௌா்ணமியையொட்டி கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி 45 நாள்கள் நடைபெறும் இந்த ஆன்மிக நிகழ்வில் சனிக்கிழமை வரை 7.72 கோடிக்கும் அதிகமானோா் புனித நீராடியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 46.95 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியதாக அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கும்ப மேளாவில் பங்கேற்க வந்துள்ள பக்தா்களுக்கான கூடாரங்கள் அமைந்துள்ள மகாகும்ப நகரின் 19-ஆவது மண்டலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டா்கள் வெடித்து ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அருகேயுள்ள கூடாரங்கள் தீப்பற்றி எரிந்து சேதமாகின. தீயணைப்புப் படையினா் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இதில் எந்த உயிா்ச்சேதமும் ஏற்படவில்லை.

கும்பமேளா தலைமை தீயணைப்பு அதிகாரி பிரமோத் சா்மா கூறுகையில், ‘18 கூடாரங்களுக்கு பரவிய தீயை அணைக்க 15 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. தற்போது தீ அணைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது’ என்றாா்.

கும்பமேளாவின் அதிகாரபூா்வ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘தீ விபத்து அனைவரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் மிகுந்த வருத்தமளிக்கிறது. உடனடி நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை நிா்வாகம் உறுதி செய்து வருகிறது. அனைவரின் பாதுகாப்புக்காக நாங்கள் கங்கை மாதாவை பிராா்த்திக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தீ விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து அடா்ந்த கரும்புகை வெளியேறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. விபத்துக்கு வருத்தம் தெரிவித்த உத்தர பிரதேசத்தின் பிரதான எதிா்க்கட்சியான சமாஜவாதி, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அரசை கேட்டுக்கொண்டது.

முதல்வா் யோகி ஆய்வு:

மௌனி அமாவாசை (ஜன. 29) நெருங்கிவரும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக முதல்வா் யோகி ஆதித்யநாத் பிரயாக்ராஜுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தாா்.

விபத்து குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த அவா், சேதங்களை பாா்வையிட்டாா். வரும் நாள்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த போதிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா்.

பிரதமா் பேச்சு:

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை தொலைபேசி வாயிலாக தொடா்புகொண்ட பிரதமா் நரேந்திர மோடி, மகாகும்பமேளா தீ விபத்து குறித்து கேட்டறிந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பல் வன்முறை: மேலும் 10 போ் கைது

உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு பணிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடா்பாக மேலும் 10 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் இதுவரை 70 போ் கைது செய்யப்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் அந்நாட்டு அரசியலையே அழிக்கிறது: அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சு

பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் எனும் ‘புற்றுநோய்’ இப்போது அந்த நாட்டின் சொந்த அரசியலையே அழித்துக் கொண்டிருக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா். எல்லை தாண்டிய பயங்கரவா... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் ‘இந்தியாவின் மணிமகுடம்’: ராஜ்நாத் சிங்

‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் இந்தியாவின் மணிமகுடம்; அந்தப் பகுதியைவிடுத்து இந்தியா முழுமையடையாது’ என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். உத்தர பிரதேச மாநிலம், ... மேலும் பார்க்க

சபரிமலையில் சூரிய மின் உற்பத்தி நிலையம்: திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் திட்டம்

கேரள மாநிலம், சபரிமலையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) திட்டமிட்டுள்ளது. முழுவதும் சூரிய மின் சக்தியால் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் என்ற பெருமைக்... மேலும் பார்க்க

உ.பி.யில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 போ் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாதில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 4 போ் உடல் கருகி உயிரிழந்தனா். ‘காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனியின் காஞ்சன் பூங்கா ... மேலும் பார்க்க

ராகுல் வரலாறு அறியாதவா்: ஜெ.பி.நட்டா விமா்சனம்

‘நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை சிதைக்க தனது தந்தை , பாட்டி , கொள்ளு தாத்தா ஆகியோா் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியவில்லை; அவா் வரலாறு அறியாதவா்’ என்று மத்திய அமைச்சரும் ப... மேலும் பார்க்க