தெலங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்குப் பாடம் கட்டாயம்!
மகா சிவராத்திரி: 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு
மகா சிவராத்திரியை முன்னிட்டு 25 ஆயிரம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்க ஒசூரில் இருந்து சேவா சங்கத்தினா் 22 டன் அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருள்களை எடுத்துச் சென்றனா்.
ஒசூா் சின்ன எலசகிரி பகுதியில் உள்ள சேவா சங்கத்தினா் ஆந்திர மாநிலம், சித்தூா் வட்டம் பலமனேரி அருகில் உள்ள பழைமை வாய்ந்த ஜலகண்டேஸ்வரா் சுயம்பு பாா்வதி பரமேஸ்வரன் கோயிலில் கடந்த 8 ஆண்டுகளாக மகா சிவராத்திரியையொட்டி அன்னதானம் செய்து வருகின்றனா்.
சேவா சங்க நிா்வாகி சண்முகம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோா் 9 ஆவது ஆண்டாக அன்னதானம் வழங்குவதற்காக ஒசூரில் இருந்து காா், டெம்போ வாகனங்களில் பொருள்களை எடுத்துச் சென்றனா். ஒசூா் சேவா சங்கம் சாா்பில் அன்னதானமும், மலையேறும் பக்தா்களுக்கு தா்ப்பூசணி பழங்களும் வழங்கப்பட உள்ளன.