மக்களே உஷார்! யாசகம் கேட்பது போல வந்து திருடும் வடமாநில கும்பல்!
கோவை : யாசகம் கேட்பது போல் வந்து திருடிய வடமாநில பெண்களின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை கணபதி அருகே உள்ள அத்திபாளையம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் பம்ப் கம்பெனியில் யாசகம் கேட்பது போல் வந்த 7 வடமாநில பெண்கள் சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பு உள்ள கம்பெனியில் இருந்த காப்பர் ஒயர் மற்றும் பித்தளை உலோகங்களை திருடிச் சென்று உள்ளனர்.
இது தொடர்பாக கம்பெனியின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கோவை சரவணம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் ஒரு பெண்மணி கம்பெனியில் உள்ள பாத்ரூமில் வைக்கப்பட்டு இருந்த பெனாயில் பாட்டிலையும் திருடிச் சென்றது சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி உள்ளது.
இதுபோல் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாரெனும் சுற்றித் திரிந்தால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தல்.