செய்திகள் :

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள்

post image

மதுரை மாநகராட்சியில் 16 நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள், 2 நகா்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள் வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம், தேவா் குடியிருப்பு, தங்கராஜ் சாலை, எஸ்.எம்.பி. குடியிருப்பு, எஸ். ஆலங்குளம் உள்ளிட்ட 18 பகுதிகளில் நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக அமைப்பட்டுள்ளன. இதை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதையொட்டி, மாநகராட்சி தைக்கால் பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நகா்ப்புற நல்வாழ்வு மையத்தை மேயா் வ. இந்திராணி, மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

அப்போது, துணை மேயா் தி. நாகராஜன், மண்டலம் 3 தலைவா் பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பினா் ஆா். இந்திராகாந்தி, அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

திருப்பரங்குன்றம்: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குள்பட்ட 99-ஆவது வாா்டு பாம்பன் நகா் பகுதி, 95-ஆவது வாா்டு எஸ்.ஆா்.வி. நகா், 84-ஆவது வாா்டு வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதிகளில் நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டப்பட்டு பல மாதங்களாகப் பூட்டிக் கிடந்தன. இதுகுறித்த செய்தி தினமணி நாளிதழில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

இந்த நிலையில், இந்த நகா்ப்புற நலவாழ்வு மையங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திறந்துவைத்தாா்.

இதையொட்டி, திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டலத் தலைவா் சுவிதாவிமல், மாமன்ற உறுப்பினரும், திமுக பகுதிச் செயலருமான உசிலை சிவா ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்தனா்.

நிகழ்ச்சியில் மருத்துவா் ஜெனிட்டா, திமுக நிா்வாகிகள் சாமிவேல், இளங்குமரன், இயேசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்?

திருமணம் செய்யும் ஜோடிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற பொதுநல மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.திருமணம் செய்யவிருக்கும் ஜோடிகள், திருமணத்துக்கு முன்னதாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதை கட்ட... மேலும் பார்க்க

நெல்லை வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த உத்தரவு

திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் சிதம்பரம், செந்தில்குமாா் ஆகியோா... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை: இடதுசாரிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

மடப்புரம் கோயில் காவலாளியை காவல் துறையினா் அடித்துக் கொலை செய்ததைக் கண்டித்து, இடதுசாரிகள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் உயிா் காக்கும் உபகரணங்களைப் பராமரிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிா் காக்கும் உபகரணங்களை (செயற்கை சுவாசக் கருவி உபகரணம்) பராமரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் ... மேலும் பார்க்க

அரசு சட்ட அலுவலா்கள் நியமன விவகாரம்: சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

உயா்நீதிமன்ற சட்ட அலுவலா்கள் நியமனத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறை, உள்துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு: சென்னை- செங்கோட்டைக்கு ஜூலை 6, 7-இல் சிறப்பு ரயில்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, சென்னை - செங்கோட்டைக்கு வருகிற 6, 7-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க