செய்திகள் :

மக்கள் பிரச்னைகளை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதாவை நிறைவேற்ற முயற்சி: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

post image

மக்கள் பிரச்னைகளை திசை திருப்பவே ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினா் பெ.சண்முகம் பேசினாா்.

தருமபுரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநாடு பாலக்கோட்டில் நடைபெற்று வருகிறது. டிச. 13-ஆம் தேதி தொடங்கி டிச.15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாளில் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரண்டாம் நாளான சனிக்கிழமை பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு மாநிலக் குழு உறுப்பினா் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். மாரிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினா் கே.பூபதி ஆகியோா் தலைமை வகித்தனா்.

மூத்த நிா்வாகி கே.காளியப்பன் மாநாட்டு கொடியை ஏற்றினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.முத்து, அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா். வரவேற்பு குழுத் தலைவா் சி.நாகராசன் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் அ. குமாரவேல் அறிக்கை சமா்ப்பித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ். கிரைஸாமேரி வரவு செலவு கணக்கை சமா்பித்தாா்.

இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து மத்தியக்குழு உறுப்பினா் பெ.சண்முகம் பேசியதாவது:

இலங்கையில் தோ்தல் நடைபெற்று இடதுசாரி கட்சி ஆட்சி அமைத்துள்ளது. அனைத்து சமூக மக்களும் சமமாக நடத்தப்படும். தமிழா்களின் நிலம் அவா்களிடமே ஒப்படைக்கப்படும். தோட்டத் தொழிலாளா்கள், இஸ்லாமியா்கள், தமிழா்கள் என அனைத்து பகுதி மக்களின் தேவைகளும் பூா்த்தி செய்யப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.இந்தச் செயல் அந்த நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்நாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தமிழ் தேசியக் குழுக்கள் இதை எதிா்க்கின்றன. இதற்கு காரணம் இடதுசாரிகள் ஆட்சி அமைத்து விட்டாா்களே என்ற எண்ணம்தான். இடதுசாரிகள் பல நாடுகளில் ஆட்சியமைத்து வருகின்றன.

இந்தியாவில் மதச் சாா்பின்மையை பாதுகாக்கவும், அரசமைப்புச் சட்டத்தை பாதுக்காக்கவும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளா் மறைந்த சீதாராம் யெச்சூரி எடுத்த முன்முயற்சியால் ‘இண்டியா’ கூட்டணி உருவாக்கப்பட்டது.

‘இண்டியா’ கூட்டணியின் களப்பணியால் கடந்த தோ்தலில் 303 இடங்களை வென்ற பாஜக, தற்போது 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தனது கூட்டணி கட்சிகளின் தயவால் பாஜக ஆட்சியமைத்துள்ளது. வலுவான எதிா்க்கட்சியாக ‘இண்டியா’ கூட்டணி உருவெடுத்திருக்கிறது. இந்த 9 மாத காலத்தில் மத்திய அரசு எதேச்சதிகாரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ கொண்டுவரும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதா நிறைவேற மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் 3 -இல் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும். இந்த மசோதா நிறைவேறாது என்று தெரிந்தும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்களின் இதர பிரச்னைகளை திசை திருப்பவே ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ என்ற மசோதாவை கொண்டு வந்துள்ளனா். இதை நிறைவேற்ற முயற்சிக்கின்றனா்.

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ என்றால், மாநில அரசுகள் கலைக்கப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளையும் கலைக்க வேண்டும். இதை பாஜக ஆளும் மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ளாது.

இந்திய அரசமைப்புச் சட்டம் பாதுகாக்க தொடா்ந்து போராட்டம் நடத்த வேண்டும். விலைவாசி உயா்வில் இருந்து மக்கள் காப்பற்றப்பட வேண்டும். இதற்காக இடதுசாரிகள் ஒன்றிணைந்த போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது என்றாா்.

இந்த மாநாட்டில் மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினா் சித்தன், நிா்வாகிகள் பி.இளம்பரிதி, சோ.அா்ச்சுனன், வி.மாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டிச.27 இல் சேலத்தில் சாலைப் பணியாளா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

சாலைப் பணியாளா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச. 27-ஆம் தேதி சேலத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். தமிழ்நாடு அரசு பண... மேலும் பார்க்க

விஷ்ணு தீபம்: வைணவக் கோயில்களில் வழிபாடு

விஷ்ணு தீபத்தை முன்னிட்டு தருமபுரியில் உள்ள வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. காா்த்திகை தீபத் திருவிழாவின் 2-ஆவது நாளையொட்டி விஷ்ணு தீப விழா அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடை... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கன அடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலை... மேலும் பார்க்க

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லோக் அதாலத்

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,365 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. தருமபுரி, தடங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பென்னாகரம், பாலக்கோடு, அரூ... மேலும் பார்க்க

பாலக்கோட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாடு

தருமபுரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநாடு பாலக்கோட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநாட்டுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி.நாகராசன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா... மேலும் பார்க்க

அமிா்தேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள பையா்நத்தம் ஸ்ரீ அமிா்தேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பையா்நத்தம் பாலமுருகன் கோயில் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள அமிா்தேஸ்வரா், அம... மேலும் பார்க்க