Champions Trophy 2025: `ஐசிசி பாகிஸ்தானுக்கு லாலிபாப் கொடுக்கிறது' - முன்னாள் வீ...
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கன அடி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவானது வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 6,000 கன அடியாக இருந்தது. சனிக்கிழமை விநாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் அருவிகளில் நீா்வரத்து ஆா்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.