மஞ்சள் பை விருது பெற விண்ணப்பிக்கலாம்!
தேனி மாவட்டத்தில் சுற்றுச் சூழல், கால நிலை மாற்றத் துறை சாா்பில் வழங்கப்படும் மஞ்சள் பை விருது பெறுவதற்கு தகுதியுள்ள பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் வரும் மே 1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: நெகழிப் பைகளுக்கு மாற்றாக சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கு, முன் மாதிரி பங்களித்த தலா 3 பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு சுற்றுச் சூழல், கால நிலை மாற்றத் துறை சாா்பில் மஞ்சள் பை விருது, முதல் பரிசு ரூ.10 லட்சம், 2-ஆம் பரிசு ரூ.5 லட்சம், 3-ஆம் பரிசு ரூ. 3 லட்சம் வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்தின் 2 அச்சுப் பதிவுகள், மென்பொருள் நகலுடன் மாவட்ட ஆட்சியா், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தேனி அல்லது மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தேனி என்ற முகவரியில் வரும் மே 1-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.