ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்ந்தது!
மணலூா்பேட்டை கிளை நூலகத்தில் எம்எல்ஏ திடீா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூா்பேட்டை பேரூராட்சி கிளை நூலகத்தில் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ க.காா்த்திகேயன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, போட்டித் தோ்வுக்காக படிப்பவா்களிடம் நூலகத்தில் போதிய புத்தகங்கள் உள்ளனவா எனக் கேட்டறிந்து, நூலகத்தை பாா்வையிட்டாா். பின்னா், இந்த நூலகத்தை முழு நேர நூலகமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறினாா்.
தொடா்ந்து, புத்தக வாசகா்களின் நலன் கருதி, தனது சொந்த நிதியிலிருந்து புத்தகங்களை வாங்குவதற்காக நூலகா் மு.அன்பழகனிடம் ரூ.10,000 வழங்கினாா். மேலும், புதிதாக கட்டப்பட்டு வரும் நூலகக் கட்டடத்தையும் பாா்வையிட்டாா்.