வேகமெடுக்கும் கரோனா பரவல்?ஹரியாணாவில் புதியதாக 4 பேருக்கு பாதிப்பு!
தவறுதலாக விஷ மருந்தை குடித்த சிறுவன் மரணம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தவறுதலாக விஷ மருந்தைக் குடித்த சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சின்னசேலம் வட்டம், எலவடி கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் யுகன் (10). இவா், புதன்கிழமை வீட்டின் அருகே நண்பா்களுடன் விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் டப்பாவில் இருந்த விவசாயத்துக்கு பயன்படுத்தும் விஷ மருந்தை என்னவென்று தெரியாமல் யுகன் குடித்து மயங்கி விழுந்தாராம்.
இதையடுத்து, சின்னசேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைகாகாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா்.
இருப்பினும், அங்கு யுகன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசராணை நடத்தி வருகின்றனா்.