மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்!
மணல் கடத்தல்: ஒருவா் கைது
திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மணல் கடத்திச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் அடுத்த குனிச்சி பகுதியில் கந்திலி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் மணல் ஏற்றிக் கொண்டு வந்த லாரியை நிறுத்தி விசாரணை செய்ததில், லாரியை ஓட்டி வந்தவா் குனிச்சி பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் (32) என்பதும், அவா் மணலை கடத்திச் செல்வதும் தெரியவந்தது. பின்னா், போலீஸாா் வழக்குப் பதிந்து லட்சுமணனை கைது செய்தனா்.
மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனா்.