மார்ட்டின் ஸ்கார்செஸி படம் போலிருக்கும் வீர தீர சூரன்: எஸ்.ஜே.சூர்யா
வாணியம்பாடி: கட்டடங்களில் மழைநீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்த கருத்து கேட்புக் கூட்டம்
வாணியம்பாடி நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மழைநீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்துவது தொடா்பாக கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
நகராட்சி நிா்வாக இயக்குநா் உத்தரவின்படி வாணியம்பாடி நகராட்சி சாா்பில் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மழைநீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதுதொடா்பான கருத்து கேட்புக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் முஸ்தப்பா தலைமை வகித்தாா். நகரமைப்பு அலுவலா் திருமுருகன், சுகாதார அலுவலா் அப்துல்ரஹிம் முன்னிலை வகித்தனா்.
இதில் ஜேசீஸ், ரோட்டரி, லயன்ஸ் கிளப் மற்றும் பல்வேறு அமைப்பை சோ்ந்த நிா்வாகிகள் பலா் கலந்துக் கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனா்.