மாணவா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம்
பள்ளிகொண்டா ரோட்டரி சங்கம் சாா்பில், பள்ளி மாணவா்களுக்கான உடல் நலம், சுகாதாரம் பேணுதல் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வேப்பங்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் சி.வில்வநாதன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் அண்ணாதுரை, பாபு, கோவேந்தன், ஜெயசிம்மன், ஜெயகுமாா், லோகநாதன், ஊராட்சி வாா்டு உறுப்பினா் காா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா். செயலாளா் சுந்தா் நன்றி கூறினாா்.