செய்திகள் :

மணிப்பூர்: 6 ராக்கெட் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல்!

post image

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் 6 ராக்கெட் குண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் ஹெங்லெப் காவல் நிலையக் கட்டுபாட்டிலுள்ள லோயிலம்கோட் மற்றும் நாலோன் பகுதியில் நேற்று (ஜன.28) பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனையின்போது 6 ராக்கெட் குண்டுகள் மற்றும் அதை ஏவக்கூடிய லாஞ்சர் ஒன்று மற்றும் ஒரு நாட்டு மோர்ட்டார் ஆயுதம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்துடன், 7.62 மி.மீ குறிபார்த்து சுடக்கூடிய துப்பாக்கி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ஜார்க்கண்டில் நக்சல் சுட்டுக்கொலை

இந்நிலையில், கிழக்கு இம்பால் மாவட்டத்தின் இன்கோல் கிராமத்தில் பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள கடைகளில் பணம் பறிப்பில் ஈடுபட்ட கே.சி.பி எனும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கியும் அதன் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகாவுக்கு மீண்டும் திருமணம்!

லப்பர் பந்து நடிகை - ஸ்வாசிகாவுக்கு மீண்டும் திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகை ஸ்வாசிகா முதன்முதலில் தமிழில் வைகை என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமு... மேலும் பார்க்க

ரூ.42 லட்சம் போதைச் செடிகள் அழிப்பு!

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சு மாவட்டத்தில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்பிலான ஓப்பியம் பண்ணை பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டது.ஒடிசாவின் தாக்கூர்முண்டா காவல் துறையினர், வனத்துறை மற்றும... மேலும் பார்க்க

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! - தமிழக அரசு

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக கைத்தறித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்க... மேலும் பார்க்க

பேருந்து நிற்கவில்லை என்று பரவும் செய்தி தவறானது: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

சிவகங்கை மாவட்டம், சோழபுரம், புனித ஜஸ்டின் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரி முன்பாக பேருந்துகள் தொடர்ந்து நின்று செல்கின்றது எனவும், பேருந்து நிற்கவில்லை என்று சமூ... மேலும் பார்க்க

சாலையில் தோன்றிய திடீர் பள்ளத்தில் சிக்கிய முதியவர்! 3வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

ஜப்பானில் சாலையின் நடுவே தோன்றிய திடீர் பள்ளத்தில் சிக்கிய 74 வயது முதியவரை மீட்கும் பணி 3வது நாளாக இன்று (ஜன.30) தொடர்கிறது. ஜப்பானின் சைதமா மாகாணத்திலுள்ள யஷியோ நகர் பகுதியில் கடந்த ஜன.28 அன்று சாலை... மேலும் பார்க்க

மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்: மா. சுப்பிரமணியன்

மருத்துவப் படிப்பிற்கான மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது பற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம... மேலும் பார்க்க