மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோவிலில் 'தனலட்சுமி அலங்காரம்' சிறப்பு பூஜை
மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை 'தனலட்சுமி அலங்காரம்' செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் 124 ஆம் ஆண்டு பெருந்திருவிழா டிச.26 ஆம் தேதி கம்பம் நடுதல் விழாவோடு தொடங்கி ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க |இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கிய இளைஞர்: மிரள வைக்கும் விடியோ!
விழாவின் முக்கிய நிகழ்வான வெள்ளிக்கிழமை அருள்மிகு பகவதி அம்மன் ரூ. 10, ரூ. 20, ரூ. 50, ரூ. 100, ரூ.200, ரூ. 500 மற்றும் நாணயங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து அலங்கார தீபாரதனை மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது. தனலட்சுமி அலங்காரத்தில் அம்மனை தரிசித்தால் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த திருவிழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.