மதுபானம் விற்றவா் கைது
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே உரிய அனுமதியின்றி மதுபானம் விற்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பொய்யாதநல்லூா், சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் சின்னக்கண் (48). இவா், டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கி வந்து, வீட்டில் வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளாா். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் செந்துறை காவல் துறையினா், சம்பவ இடத்துக்குச் சென்று வீட்டை ஆய்வு செய்த போது, மதுபானங்கள் விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, சின்னக்கண்ணை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 20-க்கும் மேற்பட்ட மதுபானத்துடன் கூடிய பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.