மதுரை ரயில்வே கோட்டத்தில் தூய்மைப் பிரசாரம் தொடக்கம்
மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில், மூன்று மாத தூய்மைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை (ஆக. 1) தொடங்கியது.
நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, மதுரை கோட்டத்தில் ஆக. 1-ஆம் தேதி முதல் அக். 31-ஆம் தேதி வரை ரயில் நிலையங்கள், ரயில்வே வளாகங்கள், ரயில்வே அலுவலகங்கள், ரயில் பாதைகளில் குப்பைகளை அகற்றுதல், பராமரித்தல், பிரசாரம் செய்தல் போன்ற பணிகளுக்கு திட்டமிடப்பட்டு, இந்தப் பிரசார இயக்கம் தொடங்கப்பட்டது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா தலைமை வகித்தாா். ரயில்வே விரைவு சக்தி திட்ட முதன்மை மேலாளா் கே. ஹரிகுமாா், முதுநிலை கோட்ட இயந்திரவியல் பொறியாளா் முகமது ஜுபீா், கோட்ட சுற்றுச்சூழல் மேலாளா் குன்டேவாா் பாதல், கோட்ட ஊழியா் நல அதிகாரி டி. சங்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த நிகழ்ச்சியில் அலுவலா்கள், ஊழியா்கள் தூய்மைப் பிரசார உறுதிமொழி ஏற்றனா்.