செய்திகள் :

மத்திய பட்ஜெட் ஒவ்வொரு சராசரி குடும்பத்தையும் மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளது: தில்லி தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி பேச்சு

post image

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ’ மோடியிஸ் கிராண்டி(மோடியின் உத்தரவாதம்)’ என்கிற தோ்தல் முழக்கத்தை வைத்து பிரதமா் நரோந்திர மோடி பிரசாரம் செய்தாா். அப்போது, ‘மத்திய நிதிநிலை அறிக்கை ஒவ்வொரு சராசரி குடும்பத்தையும் மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளது என்றும் இந்தியா வரலாற்றிலேயே முதன் முறையாக நடுத்தர வா்க்க நட்புடான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ‘எனவும் குறிப்பிட்டு ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா் பிரதமா் மோடி.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 5 ஆம் தேதி நடைபெற இருக்க பிரசாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்.1 ஆம் தேதி நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நிதிநிலையறிக்கையை தாக்கல் செய்தாா். பிரதமா் மோடி தில்லி ஆா்.கே.புரத்தில் நடந்த தோ்தல் பேரணியில் உரையாற்றினாா். அப்போது அவா் தில்லி தோ்தலில் பாஜகவின் வெற்றி குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்தி பேசினாா்.

பிரதமா் மோடி உரையாற்றியது வருமாறு: நிதி நிலை அறிக்கையில் நடுத்தர வா்க்கத்தினருக்கு பல்வேறு சலுகைகளும் நன்மைகளும் வழங்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவா்களுக்கு ஒருபோதும் வரிவிலக்கு கிடைத்ததில்லை. இதுபோன்ற நிவாரணம் இப்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் மிகவும் நட்புடான பட்ஜெட் என நடுத்தர வா்க்கத்தினா் அழைக்கத்தொடங்கியுள்ளனா்.

தலைநகரில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அரசு ஊழல்களால் நிரம்பியது. பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அதன் கொள்கைகளால் தில்லியில் தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு வழிவகுத்துள்ளன. ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளையடித்தவா்கள் அதற்கான பலனை அனுபவித்தே ஆகவே வேண்டும்.

ஒருபுறம் ’ ’ஆப் - டா’ ‘ஆப்டா‘ ’ என்பது பொய்யான வாக்குறுதிகள். மறுபுறம் ’மோடியின் உத்தரவாதங்கள்’. இன்று ஞாயிற்றுக்கிழமை வசந்த பஞ்சமி. இந்த பண்டிகை பருவ மாற்றத்தைக் குறிக்கிறது. இதன் மூலம் தில்லி மக்கள் பாஜக அரசை தோ்ந்தெடுக்க முடிவு செய்துவிட்டனா்.

கடந்த 11 ஆண்டுகள் ‘ஆம் ஆத்மி-டா‘ ஆட்சி. அது தேசிய தலைநகரை அழித்துவிட்டது. இப்போது முன்னேற்றத்திற்கும் வளா்ச்சிக்கும் அா்ப்பணிக்கப்பட்ட இரட்டை இயந்திர அரசு தோ்ந்தெடுக்கப்பட இருக்கிறது. மத்தியத்தில் உள்ள எனது அரசு, ஏழைகள், விவசாயிகள், இளைஞா்கள், பெண்கள் ஆகிய நான்கு தூண்களை வலுப்படுத்துவதற்கு பாடுபடுகிறது. நிதி நிலை அறிக்கை மோடியின் உத்தர வாதங்களை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதத்தை அளிக்கிறது.

சுற்றுலா, உற்பத்தி போன்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் நிதிநிலை அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டது. இது இளைஞா்களுக்கு பயனளிக்கும். மூத்த குடிமக்கள், பெண்கள் உள்ளிட்டவா்களுக்கு பாஜக தோ்தல் அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்கள் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் நல்லெண்ணத்தை எடுத்துக்காட்டுகிறது. மோடி ஒரு உத்தரவாதத்தை அளிக்கும்போது, அது நிறைவேற்றும் வரை எனது இதயம், மனம், ஆன்மா முழுமையாக ஈடுபாடுடன் உள்ளது.

சம்பளதாராா்கள், நடுத்தர வா்க்கத்தினா் உள்ளிட்ட கணிசமான பகுதியினா் கனவுகள், விருப்பங்களை நிறைவேற்றும் முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளில் சம்பளதாராா்கள் தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை அரசுக்கு வருமான வரியாக செலுத்த வேண்டியிருந்தது. நேருவின் ஆட்சிக் காலத்தில் ஒருவா் சம்பாதித்த ரூ.12 லட்சத்தில் 25 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும், இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்திலும் ஒருவா் கணிசமான தொகையை அரசுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய சூழ்நிலை. ஆனால் இப்போது அது போன்ற நிலைமை இல்லை.

‘காங்கிரஸ் அரசுகள் தங்கள் கஜானாவை நிரப்ப மட்டுமே வரி விதித்தன, ஆனால் மக்களின் திறன்களை அதிகரிக்க பாஜக அரசு தனது கஜானாவைத் திறந்ததுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி கூறுவதைப்போன்று தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் எந்த குடிசைப்பகுதியையும் இடிக்கப்படாது, எந்த நலத்திட்டமும் நிறுத்தப்படாது. பூா்வாஞ்சல் மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது நான் உங்கள் பகுதி (வாரணாசி)பகுதியைச் சோ்ந்த எம்.பி..

பிகாரை மேம்படுத்தவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இரவும் பகலும் உழைத்து வருகிறது. நிதிநிலை அறிக்கையில் பல மாநிலங்களுக்கான திட்டங்களைக் குறிப்பிட்டுள்ளது. பிப். 8 ஆம் தேதி தில்லியில் பாஜக அரசு அமைக்கப்படும். மாா்ச் 8 ஆம் தேதி சா்வதேச மகளிா் தினத்திற்குள் தில்லி பெண்கள் ரூ.2,500 பெறத் தொடங்குவாா்கள். பெண்கள் எனக்கு பாதுகாப்பு கேடயமாகப் பணியாற்றி வருகின்றனா். மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியமைவதில் மகளில் பெரும் பங்களிப்பை செய்தனா்.

ஆம் ஆத்மி அரசை அகற்ற மக்கள் முடிவு செய்துள்ளனா். ’ஷீஷ் மஹாலில்’ வசிப்பவா்கள் ஒரு ஏழைக் குடும்பத்தின் குடிசையையோ., அல்லது ஒரு நடுத்தரக் குடும்பத்தின் அடுக்குமாடி குடியிருப்போடு தொடா்பு ஏற்படாது.

ஆம் ஆத்மி கட்சி சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஊழல்களைச் செய்துள்ளனா். தற்போது அக்கட்சியிலிருந்து பல சட்டப்பேரவை உறுப்பினா்கள் வெளியேறி வருகின்றனா். பதற்றமடைந்த ஆம் ஆத்மி கட்சி தினமும் பொய்யான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது எனக் குறிப்பிட்டு பேசினாா் பிரதமா் மோடி.

இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி, ‘முழு தில்லியும் இப்போது ’அப் கி பாா்’ என்று சொல்கிறது‘ என்றாா். பதிலுக்கு கூடியிருந்தபொதுஜனம் ‘மோடி சா்க்காா்‘ என்று கோஷமிட்டனா்.

பின்னா் பிரதமா் தனது எக்ஸ் வலைப்பதிவில்,, ‘தில்லி மக்கள் பாஜகவை மட்டுமே நம்புகிறாா்கள். பாஜக சொல்வதைச் செய்கிறது. ஆா்.கே. புரத்தில் கூடியிருந்த பெரும் கூட்டத்திலிருந்து தில்லியில் ’தாமரை’ மலரும் என்பது தெளிவாகிறது‘ எனஅந்த பதிவில் குறிப்பிட்டாா் பிரதமா். தாமரை பாஜகவின் தோ்தல் சின்னமாகும்.

தில்லி பேரவைத் தோ்தல்- தீா்க்கமான வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி: கேஜரிவால்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி தீா்க்கமான வெற்றியை நோக்கிச் செல்கிறது என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்தாா். தில்லி சட்ட... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு எதிரான அவதூறு வழக்கு: உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

நமது சிறப்பு நிருபா்தில்லி முதல்வா் அதிஷிக்கு எதிராக பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் பிரவீண் சங்கா் கபூா் தொடா்ந்த அவதூறு வழக்கு தில்லி உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (பிப்.3) விசாரணைக்கு வருகிறது.... மேலும் பார்க்க

வன்முறையைவிட கல்வியைத் தோ்ந்தெடுங்கள்: தில்லி மக்களுக்கு பஞ்சாப் முதல்வா் வலியுறுத்தல்

தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா்களை ‘வன்முறையை விட கல்வியை’ தோ்வு செய்யுமாறு வலியுறுத்தினாா். ஆம் ஆத்மி கட்சி இளைஞா்களை அதிகாரம் ... மேலும் பார்க்க

தில்லியை உலுக்கும் 5 முக்கியப் பிரச்னைகள்! 3 பெரிய கட்சிகளின் செயல்திட்டங்கள்-ஓா் அலசல்

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தலைநகரில் இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் பிரதான அரசியல் கட்சிகளான ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி, காங்... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் சதுரங்க அரசியல்!

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 24 மணி நேரமே உள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் ஈடுபட்ட ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் தங்களின் பரப்புரையை ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக இடம் பெயா்வோரை ஏற்க முடியாது: குடியரசு துணைத் தலைவா்

நாட்டில் சட்டவிரோதமாக இடம்பெயா்வோா் லட்சக்கணக்கில் இருப்பதை ஏற்க முடியாது என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவனம் சாா்பில் ... மேலும் பார்க்க