செய்திகள் :

`மனைவி ஆபாச படங்களை பார்ப்பதை குற்றமாகக் கருத இயலாது!'- கணவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை

post image

`மனுதாரரின் மனைவி சுய இன்பம் செய்வதை விவாகரத்துக்கான காரணமாக ஏற்க இயலாது.' என்று விவாகரத்து கேட்டு தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்து.

கணவன் - மனைவி பிரச்னை

கரூரைச் சேர்ந்த ஒருவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், "கரூர் குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்து, எனக்கும் என் மனைவிக்கும் விவாகரத்து வழங்க வேண்டும்" என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் - பூர்ணிமா அமர்வு, "மனுதாரருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 2018 ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. குழந்தைகள் இல்லை. 2020 டிசம்பர் முதல் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் தனது திருமண உரிமையை மீட்டு வழங்கக் கோரி மனுதாரரின் மனைவி 2021-ல் கரூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பின்னர் அந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

தன் மனைவி பாலியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறியிருக்கிறார். ஆனால், அதற்கான மருத்துவ அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.

அடுத்ததாக அவர் குறிப்பிடும் நோய் எளிதாக சரி செய்யக்கூடியதே. அதோடு மனைவி அதிகமாக செலவு செய்கிறார், ஆபாச படங்களை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறார், வீட்டு வேலைகளை செய்வதில்லை, மாமியார் மாமனாரை மதிப்பதில்லை, அதிக நேரம் மொபைல் போனிலேயே செலவழிக்கிறார் என்ற காரணங்களாக குறிப்பிட்டிருக்கிறார்.

உத்தரவு

தடை செய்யப்பட்ட வகையினைத் தவிர தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பதை குற்றமாக கருத இயலாது. அதனை தார்மீக ரீதியாக நியாயப்படுத்த முடியாது. அதே சமயம், எதிர்மனுதாரரின் செயல், சட்டத்திற்கு புறம்பானதாக இல்லாதவரை இதனை விவாகரத்து பெறுவதற்கான காரணமாக கூற இயலாது.

மனுதாரர் எதிர்மனுதாரர் மீது வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை. அதன் காரணமாக மனுதாரர் துன்புறுத்தப்படுகிறார் என்பதையும் ஏற்க இயலாது. அப்படி அந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருப்பினும் அது சட்டத்தின் அடிப்படையில் விவாகரத்து கோருவதற்கான காரணங்களாக இல்லை. ஆகவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டனர்.

`மனிதாபிமானமற்ற அணுகுமுறை...' - அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்கில், "மார்பகத்தைப் பிடிப்பதையோ... அல்லது பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பதையோ பாலியல் வன்கொடுமை முயற்சியாக கருத முடியாது. அதனை பாலியல் ... மேலும் பார்க்க

"திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது" - சென்னை உயர் நீதிமன்றம் கூறியதன் பின்னணி என்ன?

தொல்லியல் துறையினர், திருப்பரங்குன்றம் மலை தங்களுக்குச் சொந்தமானது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.மதுரையைச் சேர்ந்த சோலைக்கண்ணன், வழக்கறிஞர் முத்து... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி: `நீங்கள் சொல்லும் தேதியில் எல்லாம் ஒத்தி வைக்க முடியாது’ - காட்டமான உச்ச நீதிமன்றம்

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏராளமான நபர்களிடம் லஞ்சம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய... மேலும் பார்க்க

FSO பதவி: `கூடுதல் தகுதியைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்ய முடியாது' - உச்ச நீதிமன்றம் உத்தரவு

`குறிப்பிட்ட பணியில் இணைய, தேவையான தகுதி என பரிந்துரைக்கப்பட்ட கல்வித்தகுதியை விட அதிகம் கற்ற நபரை அவரது கல்வித்தகுதியை மட்டுமே காரணமாக காட்டி பணியில் இணைக்காமல் நிராகரிக்க கூடாது' என்று உச்சநீதிமன்றம... மேலும் பார்க்க

சென்னை வேல் யாத்திரை: `தெளிவான உத்தரவு; தலையிட விரும்பவில்லை’ - மேல்முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம்

இந்து கடவுளான முருகனின் கோயில் அமைந்துள்ள மதுரை திருப்பரங்குன்றம் மலையை, அங்குள்ள இஸ்லாமியர்கள் உரிமை கொண்டாடுவதாகவும், அந்த மலையை காக்கும் வகையில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி வழங்க கோரி பார... மேலும் பார்க்க

`ரூ.1 லட்சம் இழப்பீடு' - மகப்பேறு விடுப்பு மறுத்த மாவட்ட நீதிபதியை கண்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கணவர் 2020-ல் மரணமடைந்துவிட, கடந்த 2024-ல் மறுமணம் செய்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் மகப்பே... மேலும் பார்க்க