மனைவியைக் கொன்று, தற்கொலை செய்துகொண்ட பேரன்: துக்கத்தில் இறுதிச்சடங்கு சிதையில் குதித்த தாத்தா
மனைவியைக் கொன்று, தற்கொலை செய்துகொண்ட பேரனின் இறுதிச்சடங்கு சிதையில் குதித்து தாத்தா தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், சிதி மாவட்டத்தின் பஹாரி பகுதியில் உள்ள சிஹோலியா கிராமத்தில் ராம் அவ்தார் யாதவ்(65). இவருடைய பேரன் அபய் ராஜ் யாதவ் (34). அபய் ராஜுக்கும் அவரது மனைவி சவிதா(30) இடையே வெள்ளிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கஞ்சா பழக்கத்தை விடுமாறு அபய் ராஜிடம் அவரது மனைவி கேட்டிருக்கிறார்.
இதில் ஆத்திரமடைந்த அவர் தனது மனைவியை வெட்டிக் கொன்றுள்ளார். பின்னர் அபய் ராஜும் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து இருவரது இறுதிச்சடங்கு சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.
ஆனால் அந்த இறுதிச்சடங்கில் அவர்களின் தாத்தா ராம் அவ்தார் யாதவ் கலந்துகொள்ளவில்லை. அவர் வீட்டிலிருந்து காணாமல் போனதை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கண்டறிந்தனர்.
பஞ்சாபில் தொழிற்சாலை கட்டடம் இடிந்ததில் ஒருவர் பலி, 5 பேர் மீட்பு
இந்த நிலையில் ராம் அவ்தார் சனிக்கிழமை இரவில் தனது பேரன் மற்றும் பேத்தியின் இறுதிச்சடங்கு சிதையில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டு இறுதிச் சடங்குகளின் எச்சங்களுக்கு அருகில் பாதி எரிந்த உடல் கிடப்பதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.
அது ராம் அவ்தார் யாதவின் உடல், அவர் இரவில் இறுதிச் சடங்கு சிதையில் குதித்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று அதே கிராமத்தைச் சேர்ந்த சிவேஷ் யாதவ் கூறினார். இதனிடையே இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.