கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
மன்மோகன் சமல்: ஒடிசா பாஜக தலைவராக மீண்டும் நியமனம்!
ஆளும் பாஜக மன்மோகன் சமலை அதன் ஒடிசா பிரிவுத் தலைவராக மீண்டும் நியமித்துள்ளது.
பாஜகவின் மத்திய தேர்தல் பார்வையாளர் சஞ்சய் ஜெய்ஸ்வால், கட்சியின் மாநில தலைமையகத்தில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் மன்மோகனின் மறுநியமனத்தை அறிவித்தார்.
பாஜகவின் மத்திய தேர்தல் பார்வையாளர் சஞ்சய் ஜெய்ஸ்வால், கட்சியின் மாநில தலைமையகத்தில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் சமலின் மறு நியமனத்தை அறிவித்தார்.
இந்தப் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ஒரே தலைவர் அவர்தான், எனவே, அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஜெய்ஸ்வால் கூறினார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒடிசா பிரிவு தலைவராகவும், மொத்தத்தில் நான்கு முறை மன்மோகன் பதவிவகித்தார்.
நவம்பர் 1999 முதல் அக்டோபர் 2000 வரை, அக்டோபர் 2000 முதல் மே 2004 வரை, மற்றும் மார்ச் 2023 முதல் ஜூலை 2025 வரை என அவரின் அவரது மூன்று பதவிக்காலங்கள் ஆகும்.
ஏப்ரல் 15, 1959ல் பத்ராக் மாவட்டத்தில் பிறந்த மன்மோகன் சமல், மாநில மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்.