மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
மயானக் கொள்ளை திருவிழா: அதிக ஒலி எழுப்பும் கருவிக்கு போலீஸாா் தடை
அரக்கோணம் மயானக் கொள்ளை திருவிழாவின் போது டிரம்பட் வடிவிலான அதிக ஒலி எழுப்பும் கருவிகளை விற்கவோ , பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் நகர போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக அரக்கோணம் நகர காவல் துறை வெளியிட்ட அறிவிப்பு:
அரக்கோணம் பழனிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோயிலின் 2025-ஆம் ஆண்டு மயானக் கொள்ளை திருவிழாவின் போது டிரம்பட் வடிவிலான அதிக ஒலி எழுப்பும் விளையாட்டு பொருள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகுந்த அச்சத்தையும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கேட்டுக் கொண்டனா்.
முந்தைய மயானக் கொள்ளை விழாக்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட காரணமாகவும் இருந்து வந்துள்ளது. இதனால் மாசுக் கட்டுபாடு விதிகளுக்கு இணங்க டிரம்பட் வடிவிலான அதிக ஒலி எழுப்பும் கருவிகளை விற்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. மீறி பயன்படுத்துவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.