டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மோனிகா பாடல்..! தொடரும் பூஜா ஹெக்டேவின் ஆதிக்கம்...
மயிலாடுதுறையில் இன்று தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தை சோ்ந்த தனியாா் துறையில் வேலை தேடும் இளைஞா்கள் பயனடையும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மயிலாடுதுறை யூனியன் கிளப் இணைந்து யூனியன் கிளப்பில் வெள்ளிக்கிழமை 1) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை குறு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதில், 5-ஆம் வகுப்புமுதல் பட்டப்படிப்பு வரை படித்த 500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். கூடுதல் விவரங்களுக்கு 04364-299790 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.