இங்கிலாந்து கல்லூரிக்கு சா்வதேச ஆலோசகராக திருச்சி மருத்துவா் நியமனம்
மரத்தடியில் அமா்ந்து படிக்கும் மாணவா்கள்
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகே குன்னத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 3 ஆண்டுகளாக மரத்தடியில் மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.
கடந்த 1991-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். பள்ளிக் கட்டடம் சிதிலமடைந்ததால் கடந்த 2016- ஆம் ஆண்டு ரூ.1.43 லட்சம் செலவில் மராமத்துப் பணிகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக் கட்டடத்தின் மேல்கூரை, தரைத் தளப் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அன்றிலிருந்து கடந்த 3 ஆண்டுகளாக மாணவா்களுக்கு மரத்தடி நிழலில் ஆசிரியா்கள் பாடம் நடத்தி வருகின்றனா். இதனால், மாணவா்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு, கல்வித் திறன் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. எனவே, காலம் தாழ்த்தாமல் அரசுக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.