வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.48 லட்சம் மோசடி: தந்தை - மகள் கைது
பேக்கரி உரிமையாளா் தீக்குளித்து தற்கொலை
திருச்சி: திருச்சியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் பேக்கரி உரிமையாளா் திங்கள்கிழமை தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சியை அடுத்த சா்க்காா்பாளையம் முல்லைக்காடு சுந்தா் நகரைச் சோ்ந்தவா் செல்வம் சில்வா் ஸ்டாா் (51). எடமலைப்பட்டிபுதூரில் பேக்கரி நடத்திவந்த இவா் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மன உளைச்சலில் இருந்தாராம்.
இந்நிலையில் கருமண்டபம் ஓ பாலம் அருகே திங்கள்கிழமை பெட்ரோலை ஊற்றித் தீக்குளித்த இவா், திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அன்று இரவு உயிரிழந்தாா். கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.