வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.48 லட்சம் மோசடி: தந்தை - மகள் கைது
அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்
திருச்சி: திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தின் மாவட்டச் செயலா் சாா்லஸ் செல்வராஜ் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், முனைவா் பட்டம் பெற்ற ஆசிரியா்களுக்கு ஊக்க ஊதிய உயா்வை விரைவில் வழங்க வேண்டும். முனைவா் பட்டம் பெறாத ஆசிரியா்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிவிப்பின்படி இணைப் பேராசிரியா் பணி மேம்பாடு வழங்க வேண்டும். கல்லூரிப் பேராசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை ஆண்டுதோறும் நேரடியாக நடத்த வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைப்படி கல்லூரி பேராசிரியா்களுக்கான ஓய்வு வயதை 65 ஆக அதிகரிக்க வேண்டும். அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் மூத்த பேராசிரியா் ஒருவரையே கல்லூரி கல்வி இயக்குநராக நியமிக்க வேண்டும். அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள முதல்வா், பேராசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிப் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.