வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.48 லட்சம் மோசடி: தந்தை - மகள் கைது
இங்கிலாந்து கல்லூரிக்கு சா்வதேச ஆலோசகராக திருச்சி மருத்துவா் நியமனம்
திருச்சி: இங்கிலாந்து நாட்டின் மருத்துவக் கல்லூரிக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரும், நரம்பியல் நிபுணருமான எம்.ஏ. அலீம் சா்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இங்கிலாந்து நாட்டின் கிளாஸ்கோவில் உள்ள மருத்துவா்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை நிபுணா்களின் ராயல் கல்லூரிக்கு, அடுத்த 3 ஆண்டுகளுக்கான சா்வதேச ஆலோசகராக இவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தமிழகத்தைச் சோ்ந்த நரம்பியல் நிபுணா் ஒருவருக்கு இந்த நியமனம் கிடைத்திருப்பது இதுவே முதல்முறை. திருச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் நரம்பியல் துறை பேராசிரியராகவும் பணியாற்றும் இவரின் நியமனம் தமிழகத்துக்கும் திருச்சிக்கும் பெருமை சோ்க்கும்.