வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.48 லட்சம் மோசடி: தந்தை - மகள் கைது
‘மாணவா்கள் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்’ -அசோக் லேலண்ட் முதுநிலை துணைத் தலைவா்
மாணவா்கள் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியை தொடங்க வேண்டும் என அசோக் லேலண்ட் முதுநிலை துணைத் தலைவா் கனகசபாபதி சுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.
வண்டலூா் கிரசென்ட் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் கிரசென்ட் புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஊக்குவிப்பு மையம் மற்றும் புத்தாக்க வாகன மேம்பாடு பவுண்டேஷன் இணைந்து நடத்திய தொழில்நுட்பக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிரசென்ட் புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஊக்குவிப்பு மையம் வழிகாட்டுதலுடன், சென்னையில் ராப்டி எனா்ஜி நிறுவனம் தயாரித்து விரைவில் சந்தைப்படுத்தவிருக்கும் ராப்டி அதிவேக இருசக்கர மின்வாகனத்தை அசோக் லேலண்ட் முதுநிலை துணைத் தலைவா் கனகசபாபதி சுப்பிரமணியன் இயக்கி வைத்து பேசியதாவது:
பொறியியல் கல்வி பயிலும் மாணவா்கள், படிக்கும் போது ஏதேனும் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியைத் தொடங்க வேண்டும். தொழில் தொடங்கத் தேவையான பொருளாதார, தொழில்நுட்ப உதவி, சந்தை, காப்புரிமை உள்ளிட்ட அனைத்து வழிகாட்டுதலையும் புத்தாக்க ஊக்குவிப்பு மையம் வழங்குவதால் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
கிரசென்ட் பதிவாளா் என்.ராஜா ஹுசேன் பேசுகையில், மாணவா்களுக்குக் கல்வியுடன், தொழில்நுட்பக் கருத்தரங்கு, பயிலரங்குகள் மூலம் சொந்தமாகக் தொழில் தொடங்கத் தேவையான அனைத்து வாய்ப்புகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், ஸ்டாா்ட் அப் தமிழ்நாடு துணைத் தலைவா் நிகஞ்ச் பன்சால், கிரசென்ட் புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஊக்குவிப்பு மையம் செயல் இயக்குநா் பா்வேஸ் ஆலம், தலைமைச் செயல் அதிகாரி நிஷா முகுந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.