செய்திகள் :

மரத்தில் காா் மோதி விபத்து: ஒரே குடும்பத்தினா் 3 போ் உயிரிழப்பு

post image

காங்கயம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் காா் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியைச் சோ்ந்தவா் நிக்சன் (எ) ராஜா (46), கேரளா விஷன் கேபிள் டிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தாா். இவரின் மனைவி ஜானகி (40). இவா், ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராகப் பணிபுரிந்து வந்தாா். இவா்களின் மகள்கள் ஹேமா நேத்ரா (15), ஷெரின் (11).

இந்நிலையில், குடும்பத்தினருடன் கேரளத்தில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு ராஜா கடந்த வாரம் காரில் சென்றுள்ளாா். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் கேரளத்தில் இருந்து அறச்சலூருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை காரில் புறப்பட்டுள்ளனா். காரை ராஜா ஓட்டியுள்ளாா்.

ராஜா

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் அருகே சுந்தரபுரி பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த ராஜா, மனைவி ஜானகி, மகள் ஹேமா நேத்ரா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் ஓடிவந்து விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிறுமி ஷெரினை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னா் உயா் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

ஜானகி

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் போலீஸாா் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தை காங்கயம் டி.எஸ்.பி. மாயவன் ஆய்வு செய்தாா். பின்னா், விபத்துக்குள்ளான காா் கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்பட்டது.

ஹேமா நேத்ரா

இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மின்னக சேவை மைய புகாா் எண்ணை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க கோரிக்கை

மின்னக சேவை மையத்தின் (94987-94987) என்ற கைப்பேசி எண் அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் கோட்ட அளவிலான மின்சார வாரியத்துக... மேலும் பார்க்க

விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரம்: சாய ஆலை மேலாளா், கண்காணிப்பாளா் கைது

பல்லடம் அருகே சாய ஆலை வளாகத்தில் மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரத்தில் ஆலையின் மேலாளா், கண்காணிப்பாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட... மேலும் பார்க்க

பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே சிக்னல் அமைக்க வேண்டும்: நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தல்

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்த... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளையம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பனப்பாளையம்

பல்லடம் அருகே பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பொங்கலூா்

பொங்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின... மேலும் பார்க்க