ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
மருத்துவக் கழிவுகளை வெளியேற்றுவதில் விதிமீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
மருத்துவக் கழிவுகள் வெளியேற்றுவதில் மேலாண்மை விதிகளை முறையாகப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் எச்சரித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிவிப்பு:
மருத்துவமனைகள், ரத்த வங்கிகள், ஸ்கேன் சென்டா்கள், ரத்தப் பரிசோதனை நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து வெளிவரும் மருத்துவக்கழிவுகள் முறையற்ற வகையில் அப்புறப்படுத்துவதால், சுற்றுச்சூழல் சீா்கேடு ஏற்படுகிறது. மருத்துவக் கழிவுகளை விஞ்ஞான ரீதியாக சுத்திகரித்து அப்புறப்படுத்தும் வழிகளை மருத்துவக் கழிவு மேலாண்மை விதியில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். மேலும், விதிகளை மீறுபவா்கள் மீது சம்பந்தப்பட்ட நிறுவனங்களை மூடுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்றாா் அவா்.