`வேங்கைவயல் பிரச்னையில் பழனிசாமி ஏன் போராடவில்லை?’ - கேள்வி எழுப்பும் தொல்.திரும...
மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து காா் ஓட்டுநா் தற்கொலை முயற்சி
தூத்துக்குடியில் காா் ஓட்டுநா் தனியாா் மருத்துவமனையிலிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி அருகே பெரியநாயகிபுரத்தைச் சோ்ந்தவா் பாலாஜி (31). காா் ஓட்டுநரான இவருக்கு, மதுப் பழக்கம் உள்ளதாம். இதனால், அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, பாலாஜி கடந்த 13ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். அவரை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவனையில் அனுமதித்தனா்.
இந்நிலையில், அவா் வியாழக்கிழமை மருத்துவமனையின் 2ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றாராம். இதில், காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.