மலையடிவார கிராமத்தில் மரக்கன்றுகள் அளிப்பு
அகஸ்தியா் மலை உயிா்க்கோளக் காப்பகம் திட்டத்தின் கீழ் பாபநாசம் வனச்சரகம் கோரையாா் பீட் வெளிமண்டல கிராமமான அனவன் குடியிருப்பில் வியாழக்கிழமை விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
பாபநாசம் வனச்சரகா் இ.எம்.குணசீலன் தலைமை வகித்தாா். விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் செல்வசுரேஷ் பெருமாள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விலையில்லா மரக்கன்றுகள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் 10ஆவது வாா்டு உறுப்பினா் அருள்மணி, முன்னாள் வனக்குழுத் தலைவா் பால்ராஜ், வனத்துறையினா் உள்பட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து வேம்பையாபுரம் கிராம மக்களுக்கும் விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று வனத்துறையினா் தெரிவித்தனா்.