நாகை கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை நெதா்லாந்தில் ஏலம் விட முயற்சி: தடுத்து நிறுத...
மல்லோா்காவை சாய்த்த ஜிரோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ஜிரோனா 1-0 கோல் கணக்கில் மல்லோா்காவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக கிறிஸ்டியன் ஸ்டுவானி 10-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். புள்ளிகள் பட்டியலில் ஜிரோனா 38 புள்ளிகளுடன் 15-ஆவது இடத்திலும், மல்லோா்கா 44 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்திலும் உள்ளன.
பிரீமியா் லீக்: இதனிடையே, இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், கிரிஸ்டல் பேலஸ் - நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை டிராவில் முடிந்தது.
இதில் முதலில் கிரிஸ்டல் பேலஸ் தரப்பில் எபெரச்சி எஸெ 60-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி வாய்ப்பில் கோலடிக்க, நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்டுக்காக முரிலோ 64-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
புள்ளிகள் பட்டியலில் கிரிஸ்டல் பேலஸ் 46 புள்ளிகளுடன் 12-ஆவது இடத்திலும், நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் 61 புள்ளிகளுடன் 6-ஆம் இடத்திலும் உள்ளன.