பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 11 பேர் பலி!
மழை நீா் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து நடவடிக்கை
மழை நீா் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் புதன்கிழமை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுப் பணித் துறை எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை பற்றியும், மழைநீா் தேங்கும் இடங்களை கண்டறிந்து உடனடியாக அவற்றை வெளியேற்றக் கூடிய அனைத்து சாத்திய கூறுகளையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.
மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், பொறியாளா் வீரச்செல்வம், பொதுப் பணித் துறை தலைமை கண்காணிப்பு பொறியாளா்கள் மற்றும் செயற்பொறியாளா்கள், துறை சாா்ந்த அதிகாரிகள், புதுச்சேரி மற்றும் உழவா்கரை நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.