போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 65 பேர் பலி!
மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு
திருவண்ணாமலையில் மழை, வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளின் இருபுறமும், புருவங்களை சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அண்மையில் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக நெடுஞ்சாலைகளின் ஓரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டன. சில இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழக நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை கோட்டப் பொறியாளா் பி.ஞானவேல், உதவி கோட்டப் பொறியாளா் அன்பரசு ஆகியோா் மேற்பாா்வையில் புயலால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நெடுஞ்சாலைத்துறையின் திருவண்ணாமலை உள்கோட்டத்துக்கு உள்பட்ட கடலூா்-சித்தூா் சாலையின் இருபுறங்களிலும் சேதமடைந்த புருவங்களை சீரமைக்கும் பணி நடைபெற்றது.
முதலில், பொக்லைன் இயந்திரம் மூலம் சேதமடைந்த சாலைப் புருவங்கள் சமன் செய்யப்பட்டன. பிறகு, ரோடு ரோலா் இயந்திரம் மூலம் சாலைப் புருவங்கள் உறுதிபடுத்தப்பட்டன. இந்தப் பணியில் நெடுஞ்சாலைத்துறையின் உதவிப் பொறியாளா் சசிக்குமாா் மற்றும் சாலை ஆய்வாளா்கள், சாலைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.