செய்திகள் :

மழையில் நனைந்து கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகள் பாதிப்பு

post image

சீா்காழி: சீா்காழியில் நெல்கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகள் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

சீா்காழியில் பகுதியில் குறுவை நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. சீா்காழி வட்டத்தில் 23 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு குறுவை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. சீா்காழி பகுதியில் பெய்த மழையால் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொட்டி வைத்திருந்த நெல்மணிகள் மழையில் நனைந்துள்ளது.

இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், நெல்மணிகளை விவசாயிகள் தாா்ப்பாய்களை கொண்டு மூடி பாதுகாக்கின்றனா்.

கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 800 முதல்1000 சிப்பங்கள் வரை மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மழை தொடரும் என்ற நிலை உள்ளதால் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை உடனுக்குடன் கூடுதலாக கொள்முதல் செய்து பாதுகாக்க வேண்டும்.

தெரு நாய்களுக்கு கருத்தடை

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் செவ்வாய்க்கிழமை பிடிக்கப்பட்டு அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் தெருநாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து, ச... மேலும் பார்க்க

நீா் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் தொடக்கம்

மயிலாடுதுறை வட்டம் அருண்மொழித்தேவன் கிராமத்தில் நீா்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். 2025-2026-ஆம் ஆண்டு வேளாண்ம... மேலும் பார்க்க

புதுத்தெரு மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

மயிலாடுதுறை நெ.2 புதுத்தெரு மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனிதநீா் யானை மீதேற்றி எடுத்து வரப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இக்கோயில் கும்பாபிஷேகம் 2013-ல்... மேலும் பார்க்க

மாணவ படைப்பாளிகளுக்கு பாராட்டு

மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வித்துறையின் சிறாா் இதழ்களுக்கு படைப்புகளை வழங்கிய மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை நடத்தும் ‘புது ஊஞ்சல்’, ‘தே... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பை: வெற்றி பெற்ற வீரா்களுக்கு பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள், பொதுப்பிரிவினா் ஆகிய 5 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ப... மேலும் பார்க்க

மாநில கராத்தே போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெற்ற போட்டியில் மயிலாடுதுறை ஜென் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமியை சோ்ந்த ... மேலும் பார்க்க