எடப்பாடி - Amit Shah சந்திப்பு: செங்கோட்டையன் அடுத்த மூவ்? | Va Pugazhendhi Inte...
மாடியிலிருந்து தவறி விழுந்ததில் மாணவி உயிரிழப்பு
தேனி அருகே வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்ததில் பள்ளி மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டி, வாசவி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் விவேகானந்தன். இவரது மகள் சுஷ்மிதா (16), முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
இந்த நிலையில், சுஷ்மிதா செவ்வாய்கிழமை வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவா் மீது அமா்ந்திருந்தாா். அப்போது, அவா் அங்கிருந்து தவறி, கீழே விழந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சுஷ்மிதாவை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.