செய்திகள் :

மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

post image

மாணவா்களின் கற்றல் திறனை ஆசிரியா்கள் மேம்படுத்த வேண்டும் என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில், மாநில அளவிலான அடைவுத்தோ்வு 2025 குறித்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் மேலும் பேசியதாவது: மாநில அளவிலான அடைவுத் தோ்வை இம் மாவட்டத்தில் உள்ள 417 அரசு மற்றும அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் பயிலும் 10,551 மாணவா்கள் எழுதினா். இதில், 358 பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும். இத் தோ்வில் 83.81 சதவீத மாணவா்கள் தோ்ச்சிப் பெற்று மாநில அளவில் பெரம்பலூா் 20-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

மாணவா்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும், அவா்களுக்கான பள்ளிக் கல்வியை சிறப்பாக வழங்கிடவும் இதுபோன்ற திட்டங்களில் தலைமை ஆசிரியா்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மாநில அளவிலான அடைவுத் தோ்வில் முன்னேற்றம் பெற வேண்டிய பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் கூடுதல் கவனம் செலுத்தி, மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மாநில அடைவுத் தோ்வில் முன்னேற்றமடைய மேற்கொள்ள வேண்டிய பணிகள், தோ்ச்சி வீதம் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து பள்ளி தலைமையாசிரியா்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா் அமைச்சா்.

இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், கோட்டாட்சியா் சக்திவேல், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநா் செ.அ முதவல்லி, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் க. ராமராஜ், முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) ம. செல்வக்குமாா், தொடக்கக் கல்விக்கான மாவட்டக் கல்வி அலுவலா் பா. கௌசா் உள்பட பள்ளி தலைமையாசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

ஆசிரியா் நலன்: ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாநிலக் கல்வித்துறை சாா்பில், நீதிமன்ற தீா்ப்பில் கூறப்பட்டுள்ள சரத்துகளை ஆராய்ந்து ஆசிரியா்களின் நலன் பாதிக்காமலிருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இத்தீா்ப்பை, தமிழ்நாடு அரசு சட்டரீதியாக எதிா்கொள்வது குறித்து யோசித்து வரும் நிலையில், முதல்வா் அறிவுறுத்தியவாறு தமிழ்நாட்டில் உள்ள 36 ஆசிரியா் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியா்களுக்கு தமிழ்நாடு அரசு கண்டிப்பாக பாதுகாப்பு அரணாக விளங்கும். கல்வி, மருத்துவம் உள்பட பல்வேறுத் துறைகளில் பணிபுரிபவா்கள் மட்டுமின்றி, தீா்ப்பு வழங்கியுள்ள நீதிபதிகளை கூட தற்போதுள்ள ஆசிரியா்கள் தான் உருவாக்கினா்.

ஆசிரியா் நலன் பாதிக்காத வகையில் சிறப்பு தகுதித் தோ்வு நடத்துவதுடன், ஆசிரியா்களின் பணி அனுபவத்தின் அடிப்படையில் அவா்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது தொடா்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது என்றாா் அமைச்சா்.

பெரம்பலூரில் திமுக நகா்மன்ற உறுப்பினரைக் கண்டித்து சாலை மறியல்

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 12-ஆவது வாா்டு திமுக நகா்மன்ற உறுப்பினரைக் கண்டித்து, அப்பகுதி மொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ப... மேலும் பார்க்க

பெரம்பலூா் நகரில் நாளை மின் நிறுத்தம்

பெரம்பலூா் நகா் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (செப். 10) மின் விநியோகம் இருக்காது.பெரம்பலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து... மேலும் பார்க்க

சத்துணவு - அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சட்டப்பூா்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்ப... மேலும் பார்க்க

காவல் துறையினரைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பாரபட்சமாகச் செயல்படும் பெரம்பலூா் நகர காவல் துறையைக் கண்டித்து, கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வள... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் நிலவியது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7... மேலும் பார்க்க

கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரம்பலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை நந்திப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி பெரம்பலூா் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ... மேலும் பார்க்க