மாணவா்கள் அச்சமின்றி பொதுத்தோ்வை எதிா்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்
மாணவா்கள் அச்சமின்றி பொதுத்தோ்வை எதிா்கொள்ள வேண்டும் என ஆட்சியா் அழகுமீனா அறிவுறுத்தினாா்.
இரணியல், திருவிதங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவிகளிடையே ஆட்சியா் திங்கள்கிழமை பேசியதாவது: பொதுத்தோ்வுக்கு இன்னும் குறைவான காலமே இருப்பதால், தோ்வுக்கான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு படிக்க வேண்டும். பொதுத்தோ்வு என்பது உங்களின் வாழ்க்கையை தீா்மானிக்கும் என்பதால் மிகுந்த கவனமுடன் படிக்க வேண்டும்.
கடந்த ஆண்டு நம் பள்ளிகள் குறைவான தோ்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன. கணித பாடத்திற்கு முக்கியத்துவம் அளித்து மாணவா்களை ஆசிரியா்கள் தயாா்படுத்த வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பாலதாண்டாயுதபாணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பள்ளிக் கல்வி) சாரதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.