தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகம்! -இபிஎஸ...
'மாதம் ரூ.1,000-த்தில் பென்சன் திட்டம்!' - யார் யார் முதலீடு செய்யலாம்? | LIC Smart Pension Plan
எல்.ஐ.சி தற்போது புதிய பென்சன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு மாதம் ரூ.1,000 செலுத்தினால் போதும் என்பதே இந்தத் திட்டத்தின் ஹைலைட்.
என்ன திட்டம் இது?
இது ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பு மற்றும் வருமான திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் ஒருவருக்கு அல்லது தம்பதியினருக்கு என முதலீடு செய்ய முடியும்.
இந்தத் திட்டத்திற்கும் சந்தையில் இருக்கும் நிலவரங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சந்தை ஏறுமுகத்தில் இருந்தாலும், இறங்குமுகத்தில் இருந்தாலும் இந்தத் திட்டம் மூலம் பயனாளருக்கு வரவேண்டிய தொகை வந்துகொண்டே தான் இருக்கும்.
யார் யார் வாங்கலாம்?
18 வயது தொடங்கி 100 வயது வரை இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

தொகை எவ்வளவு?
மாதா மாதம் ரூ.1,000, மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரூ.3,000, ஆறு மாதத்திற்கு ஒருமுறை ரூ.6,000, ஆண்டுக்கு ரூ.12,000 - பயனாளர் தோதிற்கு ஏற்றவாறு கட்டணத்தொகையை இப்படி முடிவு செய்துகொள்ளலாம்.
தொகையை போலவே மாதா மாதமாகவோ, மூன்று மாதத்திற்கு ஒருமுறையா, ஆறு மாதத்திற்கு ஒருமுறையா, ஆண்டிற்கு ஒருமுறையா என எப்போது நமக்கு தொகை கிடைக்க வேண்டும் என்பதை முடிவு செய்துக்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் குறைந்தபட்ச தொகை ரூ.1 லட்சம். அதிகபட்சமாக எத்தனை ரூபாய் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். இந்தத் தொகைக்கேற்ப தவணை தொகை அதிகரிக்கும்.
இவர்களும்!
ஏற்கெனவே எல்.ஐ.சி பாலிசி வைத்திருப்பவர்கள், இறந்த எல்.ஐ.சி பாலிசிதாரரின் நாமினி - இவர்களும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தை வைத்து கடன் கூட பெறலாம்.
ஒருவேளை பயனாளர்கள் இறந்துவிட்டால் ஒட்டுமொத்த தொகை, இன்ஸ்டால்மென்ட் பேமெண்ட், மாதா மாதம் பணம் போன்ற ஆப்ஷன்களை நாமினிகள் பெற்றுக்கொள்ளலாம்.