செய்திகள் :

50+ வயசா? சேர்த்த பணத்தை பாதுகாப்பது எப்படி? #LabhamUltimateGuide

post image
வணக்கம்! ஓடி ஓடி உழைச்சு ஒரு வழியாக அரை நூற்றாண்டைக் கடந்தாச்சு. முதலில் உங்களுக்கு நீங்களே ஒரு ஹேண்ட் ஷேக் குடுங்க. இவ்ளோ நாள் உழைச்ச உங்களுக்கு இனி சில ஆண்டுகளில் ரிட்டைர்மென்ட் வரப்போகுது. ஓய்வுக் காலத்துக்காக ஓரளவு தொகையை சேர்த்தும் வைச்சிருக்கீங்க... ஆனா இந்த சேமிப்பு பாதுகாப்பா இருக்கா? உங்களுடைய கடைசி காலம் வரை நீடிச்சு அது உங்களுக்கு கைகொடுக்குமா? பார்த்துடுவோமே...

ஃபிக்சட் டெப்பாசிட் - சரியா தவறா?

50+ வயதில் இருக்கும் பலருக்கும் ஃபேவரட் வங்கி வைப்பு நிதி, அதாவது Fixed Deposit. உங்களோட மொத்த சேமிப்பையும் பலரும் FD-ல வைச்சிருப்பீங்க. பயப்பட வேணாம், உங்களுடைய முதல் ஓரளவுக்கு பாதுகாப்பாதான் இருக்கு. ஆனா மாறிவரும் உலகத்துக்கு ஏற்றமாதிரி அது இருக்கா என்பதுதான் கேள்வியே! 

ஃபிக்சட் டெப்பாசிட்

FD-யிலும் ரிஸ்க் இருக்கு, அது இதுதான்...

பணவீக்கம்: நம்முடைய தேவைகளும் வாழ்க்கைத் தரமும் வருஷா வருஷம் கூடிகிட்டே போகுது. நமக்குத் தேவை இல்லைனு நினைச்சாலும் சமுதாயத்துக்காக சில மாறுதல்களை செய்தாக வேண்டிய கட்டாயம் இருக்குது . உதாரணத்துக்கு சாதா ஃபோன் டு ஸ்மார்ட் ஃபோன்... விலை வாசி உயர்வு அல்லது பணவீக்கம் என்பது நம் நாட்டுல சராசரியா 6-7% இருக்கு, ஃபிக்சட் டெப்பாசிட் தரும் வட்டியும் 7-8% தான் எனவே அதிலிருந்து கிடைக்கும் லாபம் வெறும் 1-2% மட்டுமே. 

நீங்க பெரிய தொகையை ஃபிக்சட் டெப்பாசிட்டில் போட்டு வெச்சிருந்தா, ஆத்திர அவசரத்துக்கு அதை உடைச்சு காசை எடுக்க முடியாது. அப்படி உடைச்சாலும் அதற்கு தண்டம் கட்டுவதோடு, குறைந்த நாட்கள்ல எடுக்குறதால வட்டியும் குறையும்!

பிக்சட் டெப்பாசிட்டின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு, நீங்க 5-30% வரை உங்களின் வருமான வரி வரம்பைப் பொறுத்து வரி கட்ட வேண்டி வரும். (வயது 60+ உள்ளவங்களுக்கு 50000 ரூபாய் வரை செக்ஷன் 80TTB மூலம் வரி விலக்கு உண்டு.

சரி நீங்க என்ன பண்ணலாம்?

உங்களுடைய வங்கியில் ஃபிக்ஸட் டெப்பாசிட்டுக்கு பணவீக்கத்தை விட அதிகமான வட்டி கிடைக்குதான்னு பாருங்க. அப்படி இல்லைனா அதில் கொஞ்சம் பகுதியை வருமானம் அதிகம் கிடைக்கும் முதலீடுகளுக்கு மாற்றுங்க. இதற்காக வரியை மிச்சப்படுத்தும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ், கடன் திட்டங்கள் மற்றும் பிற திட்டங்களில் முதலீட்டை துவங்க ஆரம்பிக்கலாம்.

சரி, பெரும் பணக்காரங்க எவ்வாறு அவங்களின் செல்வத்தை பாதுகாக்குறாங்க?

பாதுகாத்திடு - வளர்த்திடு - பயன்படுத்திடு - இதுதான் பணக்காரர்களின் வியூகம். விரிவா பார்க்கலாம்:

பாதுகாத்திடு - தங்களின் பணத்தை ஒரே இடத்துல முதலீடு செய்யாம, பணம் பற்றி நல்லா தெரிஞ்சவங்க பல இடங்களில் பிரிச்சு முதலீடு செய்வாங்க... உதாரணத்துக்கு ஸ்டாக்ஸ், பாண்ட்ஸ், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட்.

வளர்த்திடு - தங்களின் பணத்தில் ஒரு பகுதியை கண்டிப்பா பணவீக்கத்தைத் தாண்டி நல்லா வளர்ச்சி அடையுற பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்ல மறக்காம முதலீடு செய்வாங்க.

பயன்படுத்திடு - மியூச்சுவல் ஃபண்டில் போட்ட பணத்தை சிஸ்டமேட்டிக் வித்டிராவல் பிளான் எனப்படும் திட்டம் மூலம் மாதாமாதம் தங்களுக்கு ஏற்ற தொகையை எடுத்துப்பாங்க. இதனால் அவங்களுக்கு ஒரு பக்கம் வருமானம் கிடைக்கும், மறுபக்கம் அவங்களின் முதல் வளர்ந்துட்டே இருக்கும். இதுவொரு மரத்தை வைச்சு பழத்தை அறுவடை பண்ணுற மாதிரி.

இதை மறப்பாங்களா? - வயதான காலத்துல பாதுகாப்பு ரொம்ப முக்கியம். எனவே தங்களின் 12-18 மாத தேவைகளுக்கான பணத்தை ஒரு எமெர்ஜென்சி ஃபண்டாக தனியா எடுத்து பத்திரமா வைச்சிருப்பாங்க.

50 வயதுக்கு அப்புறம் பணத்தை இப்படி நிர்வகிங்க...

ஸ்டெப் 1: ஸ்மார்ட்டான போர்ட்ஃபோலியோ ஒதுக்கீடு

பிக்சட் டெப்பாசிட் மட்டுமே கதின்னு இல்லாம, உங்களின் சேமிப்பு/சொத்துக்களை பரவலாக்குவது அவசியம்.

* ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்ஸ்: 15-25%, இது வளர்ச்சிக்காகவும் பணவீக்கத்தை சமாளிக்கவும்.

* கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்: 40-50%, ஸ்திரத்தன்மைக்கும் வரியை மிச்சப்படுத்தவும்.

* ஃபிக்சட் டெப்பாசிட்: 10-15% - பாதுகாப்பிற்காக.

* லிக்விட் ஃபண்ட்ஸ்: 10-15% - அவசரத் தேவைகளுக்காக.

மேற்கண்ட அலோகேஷன் - ஒரு வழிகாட்டல் மட்டுந்தான். ஒரு நல்ல நிதி  ஆலோசகரை அணுகுவதன் மூலம் உங்களுக்கான சரியான அலோகேஷன் எதுன்னு நீங்க தெரிஞ்சுக்கலாம்.

ஸ்டெப் 2: கவலையில்லாத ஓய்வுக்காலத்துக்கு  SWP-ஐ பயன்படுத்துங்க

ஃபிக்ஸட் டெப்பாசிட் மூலம் கிடைக்கும் வட்டியை மட்டுமே சார்ந்து இருக்காம, மியூச்சுவல் ஃபண்டில் இருந்து கிடைக்கும் வருவாயாக SWP ஆப்ஷனை பயன்படுத்தலாம். 

உதாரணம்: ரூ. 50 லட்சத்தை, 10% வளர்ச்சி காணும் ஒரு ஹைபிரிட் ஃபண்டில் போட்டு, மாசாமாசம் ரூ. 30000 வித்டிரா செஞ்சா, உங்களோட பணம் பிக்சட் டெப்பாசிட்டை விட நீண்ட நாள் நிலைக்கும். அதேசமயம் முதலும் வளர்ந்துட்டே இருக்கும்.

ஸ்டெப் 3: திடீர் தேவைகளுக்கு ஆயத்தமா இருங்க

* ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ்: திடீர் மருத்துவ செலவுகள் நம் ஒட்டுமொத்த சேமிப்பையும் கரைச்சிடும். அதனால ஒரு மருத்துவ காப்பீடு கட்டாயமா தேவை. 

* எமெர்ஜென்சி ஃபண்டு: உங்களின் 12 - 18 மாதகால செலவை தனியா சேமிச்சு  வைங்க.

* எஸ்டேட் பிளானிங்:  உங்களுக்குப் பிறகு யாருக்கு உங்களின் சொத்து சேரணும்னு உயில் எழுதவும். இதனால தேவையற்ற சட்ட சிக்கல் தவிர்க்கப்படும்.

ஸ்டெப் 4: ஏமாற வேண்டாம், உஷார்!

* கேரண்டீட் ரிட்டர்ன் தர்றாங்களா? யாராவது 30-50% கேரண்டியாக ரிட்டன் தர்றேன், பணத்தை இதில் போடுங்கன்னு சொன்னா தயவு செய்து ஓடிருங்க. கேக்க நல்லாருக்கும் ஆனா நடக்காது!

* நம்புறதுக்கு முன்னாடி கவனிங்க: யாராவது முதலீட்டு ஆலோசகர் அல்லது நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன் அவர்களின் நம்பகத்தன்மையை நன்கு அலசி ஆராயுங்க.

* ஒழுங்குமுறைக்கு உட்பட்ட முதலீடு போதும்: மியூச்சுவல் ஃபண்டு, கடன் ஃபண்டு மற்றும் வங்கி சார்ந்த முதலீடுகளை ஒழுங்குபடுத்த செபி, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகள் இருக்கு. ஒழுங்கில்லாத தனியார் திட்டங்களை விட இதில் நம்ம முதலுக்கு ஒருவகை பாதுகாப்பு இருக்கு.

ஸ்டெப் 5: விகடன் லாபத்தின் வழிகாட்டல்

சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட அதைப் பாதுகாப்பது முக்கியம். 50 வயதுக்கு பிறகு செல்வத்தை பாதுகாப்பது பளு நிறைந்த வேலையா இருக்கலாம். விகடன் 'லாபம்' நிறுவனம் உங்களுக்கு கைக்கொடுக்க தயாரா இருக்கு. உங்களுடைய வாழ்நாள் சேமிப்பு பாதுகாப்பாகவும், பரவலாக்கப்பட்டும், ரிஸ்க் குறைவான முறையில் நல்ல ரிட்டன்களைக் கொடுக்கும் வழிகளை நாங்க உங்களுக்கு எடுத்துச் சொல்லுறோம்.

* உங்களின் தற்போதைய சேமிப்பு மற்றும் ரிஸ்க் திறனை ஆராய்கிறோம் - உங்களின் தற்போதைய முதலீடு உங்களுக்குப் போதுமானதா? அவை சரியான முறையில் பரவலாக்கப்பட்டு இருக்கா? என்பதை எடுத்துச் சொல்லுறோம்.

* பாதுகாப்பான, உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும் முதலீட்டு வியூகத்தை வகுத்துத் தர்றோம் - மியூச்சுவல் ஃபண்டுகள், கடன் திட்டங்கள் மற்றும் SWP மூலம் உங்களுக்கு நிலையான வருவாயையும் வளர்ச்சியையும் உறுதி செய்யுறோம்.

* தொடர்ந்து உங்களின் முதலீட்டைக் கண்காணிக்கிறோம் - நீங்க உங்களின் முதலீட்டின் வளர்ச்சியை தினசரி பார்க்க வேண்டியதில்லை. பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவ்வப்போது உங்களின் முதலீட்டை நாங்க மாற்றி அமைக்கிறோம்.

* முழு வெளிப்படைத்தன்மை - உங்களுக்கு சரியான திட்டங்களைச் சுட்டிக்காட்டி, அறிவியல் பூர்வமான முறையில் முதலீடு செய்ய உதவுறோம்.

உங்களின் சேமிப்பு சரியான இடத்துலதான் இருக்கா? பணவீக்கத்தை முறியடிக்கும் நிலையான முதலீடுகள் பற்றி தெரியணுமா? அரும்பாடு பட்டு சேர்த்த பணத்தை பாதுகாக்கணுமா? அதற்கான அடியை எடுத்து வைங்க. 

லாபம் நிறுவனத்தின் நிபுணர்களிடம் பேசி உங்களுக்கான சரியான வழிகாட்டலைப் பெறணுமா? இப்போதே இந்த லிங்கில் முன்பதிவு செய்யவும் - https://forms.gle/cRiqqBG7psCmfv5p7

குறிப்பு: விகடன் வெல்த் பிரைவெட் லிமிடெட்/லாபம், AMFI அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமாகும் - ARN-310095. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 

'மாதம் ரூ.1,000-த்தில் பென்சன் திட்டம்!' - யார் யார் முதலீடு செய்யலாம்? | LIC Smart Pension Plan

எல்.ஐ.சி தற்போது புதிய பென்சன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு மாதம் ரூ.1,000 செலுத்தினால் போதும் என்பதே இந்தத் திட்டத்தின் ஹைலைட்.என்ன திட்டம் இது?இது ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பு மற்றும... மேலும் பார்க்க

'தங்கம் ஏறுமுகம்... பங்குச்சந்தை இறங்குமுகம்!' - இப்போது எதில், எப்படி முதலீடு செய்யலாம்?!

இப்போது சந்தையை பார்த்தால், தங்கம் ஏறுமுகத்தில் இருக்கிறது... பங்குச்சந்தையும், மியூச்சுவல் ஃபண்டும் சற்று இறங்குமுகத்தில் உள்ளது. 'இந்த நேரத்தில் முதலீடு செய்யலாமா?'. 'அப்படி முதலீடு செய்தால், எப்படி... மேலும் பார்க்க

40 வயதில் ரிட்டையர் ஆவது எப்படி? இரட்டைச் சம்பளம் வாங்கும் இளம் தம்பதிகளுக்காக!

டயர்டாக இருக்கே கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ரா தூங்கலாம்னா நேத்து முடிக்கப்படாத வேலைகள் வாவான்னு அலுவலகத்துக்கு கூப்பிடும்.அரக்கப்பரக்க ஒரு சாதம், ஒரு பொரியலைக்கட்டி கேரியரில் திணிச்சு, வேகாத வெயில்ல ஆபீஸ் போய... மேலும் பார்க்க

'ரூ.12 லட்சத்திற்கு உயர்ந்த வருமான வரி சலுகை வரம்பு' - 'இந்த' 5 விஷயங்களை கட்டாயம் செஞ்சுடுங்க!

இந்தப் பட்ஜெட்டில் வருமான வரம்பு சலுகை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தியிருப்பது நடுத்தர மக்களுக்கு அடித்த ஜாக்பாட். ஆனால், அவர்களுக்கு 'இந்த சலுகை மூலம் கிடைக்கும் தொகையை என்ன செய்யலாம்... மேலும் பார்க்க

குடியரசு தினம் அன்னைக்கு நிதி சுதந்திரம் பத்தி பேசப்போறோம்! நீங்க ரெடியா? #Financial Webinar

- சைக்காலஜி ஆஃப் மணி புத்தகத்திலிருந்துபொருளாதார வெற்றி என்பது ஏதோ கஷ்டமான அறிவியல் அல்ல. அதுவொரு மென்திறன், இதற்கு நாம் எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி நடந்துகொள்கிறோம் என... மேலும் பார்க்க