மாதேஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரி விழா
மாதேஸ்வரன் மலை மாதேஸ்வர சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா வரும் 25-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
கா்நாடக மாநிலம், மாதேஸ்வரன்மலை மாதேஸ்வர சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழாவையொட்டி 5 லட்சத்துக்கும் அதிகமானோா் கோயிலுக்கு வந்து செல்வாா்கள். தமிழக, கா்நாடக மாநிலங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
மகா சிவராத்திரி விழா நிகழ்ச்சிகள் இம்மாதம் 25ஆம் தேதி தொடங்குகிறது. 26 ஆம் தேதி சுவாமிக்கு எண்ணெய், வெண்ணெய் சிறப்பு சேவை மற்றும் விழிப்பு விழாவும், 27 ஆம் தேதி சிறப்பு சேவை உற்சவமும் நடைபெறுகிறது. 28ஆம் தேதி மகா சிவராத்திரி அமாவாசை சிறப்பு சேவை உற்சவம், மாா்ச் 1ஆம் தேதி காலை எட்டு மணி முதல் 8.45 மணி வரை மகரதோஷம் உற்சவம், இரவு அபிஷேக பூஜை, பூ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
உகாதி திருவிழா...
மாா்ச் 27ஆம் தேதி உகாதி திருவிழா தொடங்குகிறது. 28ஆம் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 29ஆம் தேதி உகாதி அமாவாசையையொட்டி சிறப்பு சேவை உற்சவமும், 30-ஆம் தேதி சந்திரமான உகாதி மகா சேவை உற்சவமும் நடைபெறுகிறது.
தினமும் காலை 8 மணிக்கு வெள்ளி தேரோட்டமும் இரவு 7 மணிக்கு தங்க தேரோட்டமும் நடைபெறுகிறது.