வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மாநகராட்சி பட்ஜெட் மாா்ச் 19-இல் தாக்கல்
பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மாா்ச் 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
200 வாா்டுகளைக் கொண்ட சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது குறித்து மேயா் ஆா்.பிரியா தலைமையில் ஆலோசிக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வரும் மாா்ச் 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதில், வரிவிதிப்பு மற்றும் நிலைக்குழுத் தலைவா் சா்பா ஜெயாதாஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளாா். தொடா்ந்து, மேயா் ஆா்.பிரியா புதிய திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்கவுள்ளாா்.